கடவுள் செய்த வேலை

ரொம்ப அழகான குட்டிப் பெண் அவள். தன் தாத்தாவிடம் வந்தாள்.
அவரது முகத்தை, கையை எல்லாம் தொட்டுப் பார்த்தாள்.
தோலெல்லாம் சுருக்கமாக இருந்தது.
தன் முகத்தையும் கையையும் பார்த்துக் கொண்டாள்.
பிறகு கேட்டாள்: “தாத்தா, உன்னை யார் செய்தது?”
“சாமிதான் செய்தார், குட்டி”
“என்னை யார் செய்தார்கள்?”
“உன்னையும் சாமிதான் செய்தார்”
“சாமி உன்னை எப்போ செய்தார்?”
“ரொம்ப நாளாச்சம்மா, ஒரு எழுவது வருஷத்துக்கு முன்னாடி”
“என்னை எப்போ செய்ஞ்சார்?”
“இப்பத்தான், ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி”
“முன்னாடியவிட சாமி இப்பல்லாம்தான் நல்லா வேலைசெய்றாருன்னு தெரியுது” என்றாள் குட்டிப்பெண்.

தினம்-ஒரு-செய்தி