சுதந்திர தினம்

சுதந்திர தினம்
இன்று 71ஆம் சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது(?) மக்கள் மனத்தில் மகிழ்ச்சியில்லாதபோது சுதந்திர தினம் என்பது எங்கே இருக்கிறது? மையத்திலும் மாநிலத்திலும் அரசியல் தலைவர்களாக இருக்கின்ற முட்டாள்களுக்கு அல்லது வேஷக்காரர்களுக்கு இது புரியப்போவதில்லை. பணத்துக்காக அலைந்து பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து தமிழ்நாட்டையே விற்ற எல்லாக் கழிசடைகளும் இன்று அறிவுரை போதிக்கின்றன. என்ன செய்வது? இந்த நாட்டில் பிறந்து தொலைத்துவிட்டோமே என்ற வருத்தத்திற்குமேல் மனத்தில் வேறெதற்கும் இடமில்லை.
நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
என்று தமிழ்நாட்டுப் பெண்மணி ஒருவர் போதித்தார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்!

தினம்-ஒரு-செய்தி