பிரிவுப்பாட்டு

என்னவளே என்னவளே உன்ன விட்டுப் போறேன்
என்ன செய்ய காசில்லையே உன்ன நம்பிப் போறேன்

எங்கப்பனும் உங்கப்பனும் லட்சாதிபதி இல்ல
ஏழுநாளும் வீட்டிலருந்தா வயித்துக்குச் சோறு இல்ல (என்னவளே)

ரொம்ப தூரம் பிரிஞ்சிபோறேன்னு கவலப்படாதே
நாலுமாசம் கழிச்சி வந்து உன்னப் பாக்க வருவேன்

தாலிஒண்ணு வாங்கிவந்து கல்யாணத்த முடிப்பேன்
தடிப்பய மவன் வரலையிண்ணு ஓடிப்போவாதே (என்னவளே)

எவனயாவது கல்யாணங்கட்டி ஏமாந்து போவாதே
எதுக்கும் நானு வந்திடுவேன் கவலப்படாதே

வர்ற வரைக்கும் ஆசைய நீ காப்பாத்தி வையி
இங்கிட்டுதான் சொர்க்கலோகம் சேந்துநாம போலாம் (என்னவளே)

தினம்-ஒரு-செய்தி