அமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்

அமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்

அமுதத் தமிழ் நூல் வெளியீட்டு  விழாவும்

நாள்: 26-03-2017 ஞாயிற்றுக் கிழமை

நேரம்: மாலை 5 மணி

இடம்: லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, சென்னை-600034

ஏற்பாடு: அமுதன் அடிகள் வெள்ளிவிழா அறக்கட்டளை, 5/3, இரண்டாவது லேன், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-600008. தொடர்புக்கு: 044-28191176, 99401 30538

அமுதனடிகள் எழுபத்தைந்தாவது வயதில் அடியெடுத்துவைக்கின்ற நாளைக் கொண்டாடும் விழாவாகவும், அமுதன் அடிக்ள இலக்கிய விழாவாகவும், அமுதத் தமிழ் என்னும் நூல் வெளியீட்டு விழாவாகவும் முப்பெரும் விழாவாக இது அமைகிறது.

இவ்வாண்டு அமுதன் அடிகள் இலக்கியப் பரிசை திருமதி தமிழ்நதி, திரு. அர்ஷியா, பேரா. வஹீதையா கான்ஸ்தந்தின் ஆகிய மூவரும் பெறுகின்றனர்.

அமுதத் தமிழ் நூல் வெளியீடு – பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்.

அமுதன் அடிகள் வாழ்க்கைக் குறிப்பு

அமுதன் அடிகள் புன்னைக் காயலில் 1943இல் பிறந்தார். ரோமில் உர்பன் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் மார்க்கெட் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டமும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழ் ஆங்கிலம் இலத்தீன் இத்தாலியன் போர்த்துக்கேயம் பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்த இவர், ஒன்பது நூல்களை எழுதியுள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ளார். திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தின் செயலர், தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரியின் நிறுவனர். தனிநாயகம் அடிகள் தமிழியல் நிறுவனத்தின் இயக்குநர். பல அறக்கட்டளைச் சொற்பொழிவுகளையும், பயிலரங்க உரைகளையும் நிகழ்த்தியதோடு பல கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். மறைப்பணியையும் தமிழ்ப்பணியையும் ஒருங்கே சீருடன் ஆற்றிவரும் மதங்கடந்த மாமனிதர் முனைவர் அமுதன் அடிகள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வணங்குகிறோம்.

தினம்-ஒரு-செய்தி