இன்றைய இந்தியா

இந்தியாவில் ஏறத்தாழ 21 மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 854 பெண்கள் அல்லது அதற்கும் குறைவாக இருப்பதாக நிதி ஆயோக் குழு தெரிவித்துள்ளது. இது கவலையளிக்கும் ஒரு விஷயம் என்பதோடு, மற்றொன்றையும் கவனிக்க வேண்டும்.

எல்லாம் பழையகால மால்தூஸ் கோட்பாடுதான். வேறு எதில் இருக்கிறதோ இல்லையோ, மக்கள் தொகையில் நாம் 140 கோடியை நோக்கி “முன்னேறிக் கொண்டிருக்கிறோம்”.

(நான் உயர் பள்ளியில் படித்த நாட்களில், அறுபதுகளின் தொடக்கத்தில், 1961 மக்கள் தொகைக் கணக்கின்படி, நமது நாட்டின் மொத்த மக்கள் தொகை 45 கோடி).

நம்மைப்போல மூன்று மடங்கு நிலவியல் பரப்புக் கொண்ட சீனாவெல்லாம் தன் மக்கள் தொகைப் பெருக்கத்தை நிறுத்தி எத்தனையோ காலம் ஆகிவிட்டது.

மூன்றாம் உலகப்போர் ஏற்படப் போவது தண்ணீருக்காகத்தான் என்கிறார்கள.

நம்நாட்டு மக்கள் தொகைப் பெருக்கத்தினால் அதற்கு முன்னாலேயே கொடிய வேலை வாய்ப்பின்மை, வளங்களின் சுருக்கம், உணவின்மை, நீரின்மை எல்லாம் ஏற்பட்டு நாம் பஞ்சத்தினால் சாகப்போகிறோம்.

ஏற்கெனவே விவசாய நிலங்கள் தரிசாகிவிட்டன. இந்தியாவில் பாலைவனப் பரப்பு அதிகரித்து வருகிறது. நிஜக் காடுகளுக்கு பதிலாக கான்கிரீட் காடுகள்தான் முளைத்திருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஊழல் திருட்டு கொள்ளை தலைவிரித்தாடுகிறது. மக்களை கவனிக்க ஆளில்லை.

வேலைவாய்ப்புக் கேட்கும் இளைஞர்களைப் பக்கோடா விற்கச் சொல்லும் அரசியல் வியாதிகள் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு நடைபாவாடை விரித்து நாட்டை இன்னும் வறுமையில் தள்ளுகிறார்கள். இருக்கும் கொஞ்ச வளங்களும் பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளாலும் உள்நாட்டு முதலாளிகளாலும் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்திய மக்களின் வியர்வை ஸ்விஸ் பாங்குகளில் நிரப்பப்படுகிறது.

என்ன செய்யப் போகிறோம் நாம்?

சமூகம்