கூண்டுப் பறவை- சிறுகதை

(கீழ்வரும் கதை நோபல் பரிசு பெற்ற வங்க எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரால் (1861-1941) எழுதப்பட்டது. கல்வி என்பது என்ன எனக் கேள்வி  எழுப்புகிறது இக்கதை.)

ஒரு காலத்தில் ஒரு சிறிய பறவை இருந்தது. அதற்கு நாகரிக நடத்தைமுறைகள் தெரியாதுஅது புத்தகங்களும் படித்ததில்லை.

இந்தப் பறவை ஒன்றுக்கும் லாயக்கில்லைஅது தோட்டத்திலுள்ள பழங்களைத் தின்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை” என்றான் அரசன். தன் அமைச்சரைக் கூப்பிட்டு, “அதற்குக் கொஞ்சம் கல்வி அளியுங்கள்” என்றான்.

koondupparavai2
கல்வி அளிக்கும் பொறுப்பு அரசனின் மைத்துனனுக்குச் சென்றது. அவன் பல பண்டிதர்களை அழைத்து அந்தப் பறவை ஏன் சற்றும் கல்வி இல்லாமல் இருக்கிறது என்று கண்டறியச் சொன்னான்.

அவர்கள்பறவையின் கூடு வெறும் வைக்கோலினால் ஆகியிருப்பதால்தான் அவ்வாறு நேர்ந்தது என்று முடிவு செய்தார்கள். ஆகவே முதலில் செய்ய வேண்டிய வேலை தேர்ந்தெடுத்த பொருள்களால் ஒரு கூண்டு செய்வதுதான் என்றார்கள்.

koondupparavai3
அரசன் அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்து அனுப்பிவைத்தான்.

பொன்னாலான ஒரு அழகிய கூண்டினைச் செய்யப் பொற்கொல்லனை வருவித்தான். அந்தக் கூண்டினைக் காண வெகுதொலைவிலிருந்து எல்லாம் மக்கள் வந்தார்கள்.

சிலர், “கல்வியின் தரம் மிக உயர்ந்துவிட்டது!” என்றார்கள். இன்னும் சிலர் “கல்வியே இல்லாவிட்டாலும் இப்படிப்பட்ட உயர்ந்த கூண்டில் அந்தப் பறவை வசிக்கிறது. எவ்வளவு அதிர்ஷ்டம் அதற்கு!” என்றார்கள்.

பொற்கொல்லனும் பரிசுகளைப் பெற்றுச் சென்றான்.

அரசனின் மைத்துனன்பாடப்புத்தகங்கள் எழுதுவோரை வரவழைத்தான். அவர்கள் இருக்கும் நூல்களுக்குப் படிகள் எடுத்தார்கள்படிகளுக்குப் படிகள் எடுத்தார்கள். கொஞ்சநாளில் புத்தகங்கள் மலைபோல் குவிந்துவிட்டன. பார்த்தவர்கள், “சபாஷ்இதல்லவோ கல்வி!” என்றார்கள்.

பாடப்புத்தகங்கள் எழுதியவர்களும் உயர்ந்த பரிசுகள் பெற்று வீடு திரும்பி னார்கள்.

தொடர்ந்து கூண்டினை மிக நன்றாகப் பராமரிக்கவேண்டிப் பல ஆட்களை அமர்த்தினான் அரசனின் மைத்துனன்.

சிலபேர், “கூண்டை நன்றாகத்தான் கவனிக்கிறார்கள். ஆனால் உள்ளே இருக்கும் பறவையை ஒருவரும் கவனிப்பதில்லையே!” என்று விமரிசனம் செய்தார்கள். அரசன் காதில் இந்தச் சொற்கள் விழுந்ததும் மைத்துனனை அழைத்தான்.

வணக்கத்திற்குரிய அரசேதெரிந்தவர்கள்-பொற்கொல்லர்கள்ஆசிரியர்கள்பாடப் புத்தகம் எழுதியவர்கள்,நிர்வாகிகள்-முதலியோரிடம்தான் உண்மையை அறியமுடியும். இந்த விமரிசகர்கள் வேலையற்றவர்கள்,இப்படித்தான் கூச்சல்போடுவார்கள்” என்றான் மைத்துனன்.

இந்தச் சமாதானம் அரசனை அமைதிப்படுத்தியது. அவன் மைத்துனனுக்கும் ஒரு தங்க நெக்லஸ் பரிசாக அளித்தான்.

ஒருநாள்பறவைக்கு அளிக்கப்படும் கல்வி எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்று தானே நேரில் காணவிரும்பினான் அரசன். அவையினருடன் பறவையின் கல்வி மையத்துக்கு வந்தான். தொழிலாளர்கள்,வேலையாட்கள்பாடப்புத்தகக் காரர்கள்மேற்பார்வையாளர்கள் எல்லாரும் அவரவர் இடத்தில் இருந்தார்கள்.

முற்றிலும் திருப்தியடைந்தவனாகஅரசன் தன் யானைமீது ஏறப்போனான். அப்போது அருகில் ஒளிந்திருந்த விமரிசகன் ஒருவன், “அரசேபறவையைப் பார்த்தீர்களா?” என்று கூச்சலிட்டான்.

அரசனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. “ஆமாம்மறந்தேவிட்டேன்” என்றான். “நாம் பறவையைப் போய்ப் பார்ப்போம்,வாருங்கள்” என்றான்.

யாவரும் பாடம் நடத்தும் செயலை அவனுக்கு நிகழ்த்திக் காட்டினார்கள். அது மிகவும் பெரிதாக இருந்தது. பறவை கண்ணுக்குத் தென்படவே இல்லை. பறவைக்குப் பாடம் சொல்ல இவ்வளவு அரிய முயற்சிகள் நடக்கின்றனவே என்று அரசன் திருப்தி யடைந்தான்.

பறவைக் கூண்டுக்குள் உணவோ நீரோ இல்லை. அதற்கு பதிலாகப் புத்தகங்களிலிருந்து கிழிக்கப்பட்ட தாள்கள் பேனாவினால் உள்ளே செலுத்தப்பட்டன.

பறவை இப்போதெல்லாம் பாடுவதே இல்லைஅதற்கு மூச்சுவிடவும் இட மில்லை.

தாங்கள் சரியான காரியங்களைத்தான் செய்வதாக அதன் பாதுகாவலர்கள் நினைத்தார்கள்.

koondupparavai11
நாளுக்கு நாள் பறவை மிகவும் இளைத்துப்போயிற்று. அதனால் குதிக்கவோ ஆடவோ சற்றும் இயலவில்லை. இருந்தாலும் பழக்கத்தின் காரணமாககாலைச் சூரிய ஒளியைக் கண்டபோது சிலமுறை அது தன் சிறகுகளை அடித்துக்கொள்ள முயன்றது.

சிலசமயங்களில் தன் பலவீனமான அலகினால் தங்கக்கூண்டின் கம்பிகளைக் கொத்த முயன்றது. “எவ்வளவு மோசமான நடத்தை!” என்று காவலாளிகள் கத்தினார்கள்.

ஒரு கொல்லனை வருவித்துப் பறவையைச் சங்கிலியால் கட்ட முடிவு செய் தார்கள். அதன் இறக்கைகளும் வெட்டப்பட்டன. “இந்த நாட்டில் பறவைகள் முட்டாள்கள் மட்டுமல்லஅவற்றிற்கு நன்றியும் இல்லை” என்றார்கள்.

ஒருநாள் பறவை செத்துப்போயிற்று. அது இறந்த சமயம் ஒருவருக்கும் தெரியாது. இந்தச் செய்தி பரவியது. அதை உறுதிப்படுத்திக் கொள்ள மைத்துனனை அரசன் வருவித்தான்.

அரசேபறவையின் கல்வி இப்போது பூர்த்தியாகிவிட்டது” என்றான் மைத்துனன்.

அரசன் கேட்டான்அது இப்போதெல்லாம் குதிப்பதில்லையா?

koondupparavai4-300x213
கடவுளேஇல்லை அரசே.”

அது பறக்கிறதா?”

இல்லை அரசே.”

அது பாடுகிறதா?”

இல்லை அரசே.”

அப்படியானால்பறவையைக் கொண்டுவாநான் பார்க்கவேண்டும்.”

பறவையை அரசன் சுரண்டிப் பார்த்தான். பறவையிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை. அதன் வயிற்றில் அடைக்கப்பட்டிருந்த தாள்கள் மட்டுமே சரசரத்தன.

மொழிபெயர்த்த_சிறுகதை