சாதியும் இனமும்

சாதி என்பது அகம். இனம் என்பது புறம். ஒருவனது இனம் என்பதில் அவனது மொழி, நாகரிகம், பண்பாடு ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.
நாம் அயலாருடன் போராடும்போது இனத்தை முன்வைத்தே போராடுகிறோம். கர்நாடகத்திலிருந்து நீர் வேண்டும் என்று கேட்கும்போது தமிழன் என்ற அடையாளம் முன்நிற்கிறதே ஒழிய சாதி அல்ல. காவிரியில் நீர் வேண்டாம் என்று கூறும் பார்ப்பனரையோ தலித்தையோ காணமுடியாது.
நமக்குள் போரிடும் நிலை வரும்போதுதான் சாதி வருகிறது. இளவரசன் கொலை என்னும்போது சாதிரீதியாகத்தான் பேசவேண்டியிருக்கிறது.
தமிழினத்திற்குள் எத்தனையோ சாதிகள். ஆனால் ஒருவர்க்கொருவர் பேசித்தீர்க்க வேண்டுமே தவிர அடிதடி சண்டை கும்பல் வெட்டு கொலை என இறங்கினால், இழப்பு தமிழ் இனத்திற்குத்தான்.
சாதியற்ற நிலை, இலட்சியம். அது வருவதற்குச் சிலகாலமோ பலகாலமோ ஆகலாம். அதுவரை வேறு வழியில்லை. சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். பகுத்தறிவுரீதியான சிந்தனை ஒன்றுதான் சாதிக் கொடுமைகளை எதிர்க்கும் ஒரே வழி. பார்ப்பனியம் பகுத்தறிவுக்கு முரணானது என்பதால்தான் சாதியை எதிர்க்கும்போது பார்ப்பனியத்தையும் எதிர்க்க நேரிடுகிறது.
நீட்தேர்வுக்கு முதல் எதிரி மைய அரசு. அதனுடன் போரிடுகிறோம். தமிழன் என்ற அடையாளத்துடன், தமிழ்நாடு என்ற முத்திரையுடன்தான் இதற்குப் போராட வேண்டும். இங்கு சாதிவேறுபாட்டைப் பார்க்கலாகாது. (அதனால்தான் அனிதா (தற்)கொலைக்குச் சாதிவேறுபாடின்றி அநேகமாக அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.) நீட் தேர்வு வேண்டும் என்பவன் தமிழ் இனத்துக்கே எதிரியாகத்தான் இருக்கமுடியும்.

சமூகம்