வாழ்க்கையில் சில பக்கங்கள் -1

ரொம்பக் காலத்துக்கு முன்னால் நடந்த விஷயம். 1990 இறுதி அல்லது 1991 ஆக இருக்கலாம். பெரிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர் என்று புகழ்பெற்ற எம்.எடி.எம்-ஐ (முத்துக்குமாரசாமியை) திருநெல்வேலியில் சந்தித்தேன். அப்போது எனது தகவல் தொடர்பு பற்றிய புத்தகம் வெளிவந்திருந்தது. “உங்கள் மொழிபெயர்ப்பில் குறைகள் உள்ளன” என்றார். “சரி சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன், சரியாக இருந்தால்” என்றேன். “(கம்யூனிகேஷன்) ‘மாடல்’ என்பதற்கு ‘நிகழ்மாதிரி’ என்று ஏன் போட்டிருக்கிறீர்கள்? நாங்கள் ‘மாதிரி’ என்றுதான் மொழிபெயர்ப்போம்” என்றார். ஒரு மொழிபெயர்ப்பாளன் இதையெல்லாம் யோசிக்காமல் செய்வதில்லை.
This model, that model என்று வரும்போதெல்லாம், இந்த நிகழ்மாதிரி, அந்த நிகழ்மாதிரி என்று எழுதினால் பொருள் விளங்கும், மயக்கம் இருக்காது. வெறுமனே ‘இந்த மாதிரி’, ‘அந்த மாதிரி’ என்று மொழிபெயர்த்தால் என்ன ஆகும்? (இதுபோல, அதுபோல என்ற அர்த்தத்தைக் கொடுத்துவிடும்.) ஆங்கிலப் பேராசிரியரான அவருக்கு அவ்வளவு ஞானம் தமிழில்!
இம்மாதிரி ஆசாமிகள்தான் எனது சல்மான் ருஷ்தீ மொழிபெயர்ப்பைக் குறைசொல்லி, அதைப் பாப்புலர் ஆகாமல் செய்தார்கள். மூல ஆசிரியர்களிடம் பேசும் அளவுக்கு அவர்களுக்குச் செல்வாக்கு இருக்கிறது. பாவம் நாங்கள் எல்லாம் விலாசம் அற்றவர்கள். என்ன செய்வது? அவர்கள் போன்றவர்கள் சொல்வதைத்தான் மற்றவர்களும் நம்புகிறார்கள்.

தினம்-ஒரு-செய்தி