இந்தியாவின் கருப்புப் பணம்

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தி

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியக் கருப்புப் பணம் 35,86,79,86,33,00,000 ரூபாய்.(ஏறத்தாழ 1.3 டிரில்லியன் டாலர் அளவு எனக் கணிக்கப்படுகிறது).
இந்தப் பணம் முழுவதும் 2000 இந்தியர்களுக்குச் சொந்தம். வரி ஏய்ப்புக்காக வைக்கப்பட்ட பணம். 
இந்தப் பணம் நேராக நம்மிடம் இருந்தால் நாம் பத்து அமெரிக்காவுக்கு இணையாக இருப்போம். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மிகச் சக்திவாய்ந்த, உலகிலேயே வளர்ந்த நாடாக இருப்போம். 

விக்கிலீக்ஸ், ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப்பணம் பதுக்கிவைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அவர்களில் முதல் முப்பது இடங்களில் இருப்பவர்கள் பின்வருவோர்:

1. அம்பானி – 5,68,000 கோடி
2. அதானி – 7,800 கோடி
3. அமித் ஷா – 1,58,000 கோடி
4. ராஜ்நாத்சிங் – 82,000 கோடி
5. அருண் ஜேட்லி – 15,040 கோடி
6. ஸ்மிருதி ஈரானி – 28,900 கோடி
7. எடியூரப்பா – 9,000 கோடி
8. ரவி ஷங்கர் (குருஜி) – 15,000 கோடி
9. பாபா ராம்தேவ் – 75,000 கோடி
10. ஜனார்தன ரெட்டி – 50,000 கோடி
11. நளின் கோலி – 5,900 கோடி
12. தேவேந்திர பட்னாவிஸ் – 2,20,000 கோடி
13. லலித் மோடி – 76,888 கோடி
14. சுஷ்மா ஸ்வராஜ் – 5,82,114 கோடி
15. நரேந்திர மோடி (பிரதமர்) – 19,800 கோடி
16. ஹர்ஷ்த் மேத்தா – 1,35,800 கோடி
17. கேத்தன் பாரேக் – 8,200 கோடி
18. கட்ட சுப்ரமண்ய நாயுடு – 14,500 கோடி
19. லாலு பிரசாத் யாதவ் – 28,900 கோடி
20. ஜே. எம். சிந்தியா – 9,000 கோடி
21. கலாநிதி மாறன் – 15,000 கோடி
22. வை. கோ. – (வையாபுரி கோபாலசாமி) -35,000 கோடி
23. வசுந்தரா ராஜே – 5,900 கோடி
24. ராஜ ஃபவுண்டேஷன் – 1,89,008 கோடி
25. என். சந்திரபாபு நாயுடு – 1,68,009 கோடி
26. ஜே. ஜெயலலிதா – 2,57,500 கோடி
27. சோனியா காந்தி – 3,00,089 கோடி
28. சுப்பிரமணிய சுவாமி – 2,20,060 கோடி
29. சசிகலா (சின்னம்மா!) – 1,54,700 கோடி
30. டிடிவி தினகரன் – 12,870 கோடி


பூமி வெப்பமயமாதல்

இன்னும் பத்தாண்டுகளுக்குள் பூமியில் இப்போதிருக்கும் வெப்பத்தை விட நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாகிவிடும்.
இமயமலையின் பனிப்பாறைகள் (கிளேசியர்கள்) மிக வேகமாக – அதிர்ச்சி தரும் வேகத்தில் உருகி வருகின்றன. 
ஓரளவு சமாளிக்க ஒரே வழி மரங்களை நடுவதும், இருக்கும் காடுகளையும் மரங்களையும் அழிக்காமல் இருப்பதும்தான். 
நீரைச் சேமியுங்கள். 
பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாதீர்கள். முக்கியமாக அதை எரிக்காதீர்கள். 
ஜக்கி போன்ற ஆசாமிகளுக்கு!
சிவனுக்குச் சிலைவைப்பதைவிட சிவனின் இருப்பிடமாகக் கருதப்படும் கயிலை மலையை, இமயமலையை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்.

சிந்தித்தல்

புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருங்கள். ஆனாலும் அவை புத்தகங்களே என்பதை மறக்காதீர்கள்.  சிந்திக்கப் பயிலுங்கள்.  உங்களுக்காகச் சொந்தமாக நீங்கள் மட்டுமே சிந்திக்க முடியும். -கார்க்கி.


கடவுள் செய்த வேலை

ரொம்ப அழகான குட்டிப் பெண் அவள். தன் தாத்தாவிடம் வந்தாள்.
அவரது முகத்தை, கையை எல்லாம் தொட்டுப் பார்த்தாள்.
தோலெல்லாம் சுருக்கமாக இருந்தது.
தன் முகத்தையும் கையையும் பார்த்துக் கொண்டாள்.
பிறகு கேட்டாள்: “தாத்தா, உன்னை யார் செய்தது?”
“சாமிதான் செய்தார், குட்டி”
“என்னை யார் செய்தார்கள்?”
“உன்னையும் சாமிதான் செய்தார்”
“சாமி உன்னை எப்போ செய்தார்?”
“ரொம்ப நாளாச்சம்மா, ஒரு எழுவது வருஷத்துக்கு முன்னாடி”
“என்னை எப்போ செய்ஞ்சார்?”
“இப்பத்தான், ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி”
“முன்னாடியவிட சாமி இப்பல்லாம்தான் நல்லா வேலைசெய்றாருன்னு தெரியுது” என்றாள் குட்டிப்பெண்.


அனுபவம்-1

சாதி என்பது என்ன? ஒருவன் தன் பெற்றோரைத் தான் தேர்ந்தெடுக்க முடியாத இயற்கை நிலைக்காக அவனைத் தண்டிப்பதுதான். ஆகவே சாதியமைப்புகள் கூடாது, அவற்றை நீக்கவேண்டும் என்று எழுதினேன். நண்பர்கள் என்னிடம் கலைத்தன்மை இல்லை என்றனர். நான் எதிர்பபாளன், ஆகவே தண்டிக்கப்பட வேண்டியவன் என்றது அரசாங்கம். ஆனால் 

பெற்றோரை

நான் தேர்ந்தெடுக்காததால்

என்னைச்

சேரியில் தள்ளிவிட்டார்கள்

என்று நண்பன் ஒருவன் அதையே மாற்றி எழுதினான். அவனைக் கவிஞன் என்று போற்றினார்கள். அரசாங்கம் விருது அளித்து கவுரவித்தது.


தண்ணீர் தந்த பாடம்

ஒரு நாள் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்கள் சிலரோடு வேறு ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் எல்லாரும் ஓர் ஓடையின் அருகில் ஓய்வெடுத்தார்கள். ஆசிரியர் சொன்னார்: “எனக்கு தாகமாக இருக்கிறது. யாராவது போய்க் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறீர்களா?”

ஒரு மாணவர் ஓடைக்குச் சென்றார். அப்போது சிலர் துணிதுவைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மாட்டு வண்டி ஓடையைக் கடந்து சென்றது. மாடுகளின் குளம்புகள் பட்டு ஓடைநீர் சேறாக மாறியது.

“இந்த நீரையா ஆசிரியருக்குத் தருவது?” என்று எண்ணிய மாணவர், ஆசிரியரிடம் சென்று, “ஐயா, நீர் கலங்கலாகவும் சேறாகவும் இருக்கிறது. நீங்கள் குடிக்கத் தகுதியானதாக இல்லை” என்றார்.

ஏறத்தாழ அரை மணிநேரம் ஓய்வு எடுத்தபிறகு அனைவரும் கிளம்பத் தயாரானார்கள். ஆசிரியர் மீண்டும், “எனக்கு தாகமாக இருக்கிறது. யாராவது கொஞ்சம் தண்ணீர் கொடுக்கிறீர்களா?” என்று கேட்டார்.

முன்புசென்ற அதே மாணவர் மறுபடியும் ஓடைப்பக்கம் சென்றார். என்ன ஆச்சரியம்! இப்போது ஓடையருகில் யாரும் இல்லை. நீர் மிகவும் தெளிந்து குடிப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அதைக் கொண்டுசென்று ஆசிரியரிடம் கொடுத்தார்.

ஆசிரியர் மாணவரைக் கூர்ந்து நோக்கினார். “பார்த்தாயா, இப்போது நீர் தெளிவாக இருக்கிறது. என்ன செய்தாய்?”

“ஒன்றும் செய்யவில்லை. முன்பிருந்த நீரைப் பார்த்தேன் அல்லவா?  அதை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டேன். அவ்வளவுதான். சேறு தானாகவே படிந்து, நீர் தெளிந்துவிட்டிருக்கிறது.”

“உன் மனமும் அப்படித்தான் என்றார் ஆசிரியர். எப்போது மனம் குழம்பியும் தெளிவற்றும் கவலையில் மூழ்கியும் இருக்கிறதோ, அப்போது அதைச் சற்று நேரம் விட்டுவிடு. வேறு செயல்களில் ஈடுபடு. பிறகு விஷயங்கள் தானாகவே விலகி, குழப்பங்கள் நீங்கி, மனம் தெளிவாகிவிடும்”.


தமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை

தமிழகம் என்றைக்குமே பொதுவாக வறண்ட நாடாகத்தான் இருந்துவந்துள்ளது. சங்ககாலம் தொட்டு நமது அரசர்கள் ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், கல்லணைகள் போன்ற அணைகள் ஆகியவற்றைக் கட்டிப் பராமரித்ததன் காரணம் இதுதான். ஆனால் இன்றைய நிலை என்ன?

தமிழ்நாட்டில் விவசாய நீர்த்தேவை ஏறத்தாழ 1500 டிஎம்சி என்றும் தொழிற்சாலைகளின் நீர்த்தேவை 200 டிஎம்சி என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் காவிரியிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீர் சட்டப்படி 192 டிஎம்சி. (சுமார் 200 டிஎம்சி) மீதி 1500 டிஎம்சி நீரை நாம்தான் சமாளித்தாக வேண்டும்!

தமிழகத்தில் சராசரி மழைப் பொழிவு 100 செ.மீ. இது 4343 டிஎம்சி நீருக்குச் சமம். (இந்த ஆண்டு வேண்டுமானால் குறைவு).
இதைக் காப்பாற்ற நாம் என்ன செய்தோம்? தமிழகத்தின் மொத்தத் தேவையே இதில் மூன்றில் ஒரு பங்குதானே?

தமிழக அரசு ஏரிகள் குளங்களைப் பராமரிப்பதில் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை. இதைத்தான் இன்றைய பாஜக நமக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

இன்று தமிழக ஏரிகுளங்களின் நிலை நமக்கு நன்றாகவே தெரியும். பெரும்பாலும் வீட்டுமனைகள், தொழிற்சாலைக்கான இடங்கள் என ஏரிகள் மாற்றப்பட்டன. குளங்கள் வெறும் குப்பைத்தொட்டிக்ளாக மாற்றப்பட்டுத் தூர்ந்து போயிருக்கின்றன. ஆற்றுமணல் திட்டமிட்ட கொள்ளைக்குள்ளாகி ஆறுகள் கட்டாந்தரைக ளாக்கப்பட்டன.

ஆறுகளின் நிலையோ சொல்லத் தரமில்லை. காவிரிக்கு நீர் வரத்து அறவே இல்லாமல் போயிற்று. வைகை வறண்டு போனது.
பாலாறு தோல்கழிவுகளின் புகலிடமானது.
நொய்யலாறு சாயக்குட்டையாக மாறியது.
தாமிரபரணியின் நீர் தனியார் கொள்ளைக்கு அரசினால் விடப்பட்டது.
நியூட்ரினோ திட்டத்திற்குப் பெரியாற்றிலிருந்து தனம் 12 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது.

இதற்கெல்லாம் யார் காரணம்? நமது தமிழக அரசுதானே? இந்த நீர்வளங்களைக் காப்பாற்றாமல் அம்மா குடிநீர் விற்பனை ஜோராக நடக்கிறது.
இதற்கிடையில் நமது நிலவளத்தை மீத்தேன் திட்டம் போன்றவை கொள்ளையடிக்கத் தொடங்கியுள்ளன. பெப்சி கம்பெனிக்கு 1லி பத்துபைசாவுக்கு விற்பனை செய்யும் தமிழக அரசு விவசாயிகள் பிரச்சினையைக் கண்டுகொள்வதில்லை. அவர்களைச் சந்தித்துப் பேசுவதும் இல்லை. நீர்ப்பாசனத்துக்கு வேண்டி அவர்களுக்கு எவ்வித உதவிகளும் செய்வதில்லை.

மாறாக உலகவங்கியின் திட்டப்படி, பாசனம் பெறும் விவசாயி ஒரு ஹெக்டேருக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்தி நீரைப் பெறும் விதமாக Farmers’ Management Irrigation System Act என்பதைத் தமிழக அரசு கொண்டுவர இருக்கிறது.

இந்த நிலையில் நாம் என்ன செய்யப்போகிறோம்? நண்பர்களே, சிந்தியுங்கள். தக்க நடவடிக்கைக்கு ஆவன செய்யுங்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் எந்த ஒரு தேவைக்கும் தமிழகம் நீரின்றி முற்றிலும் பாலைவனமாகும் அபாயம் இருக்கிறது. இதைத் தவிர்ப்பதும் நமது கையில்தான் இருக்கிறது.


இன்று ஒரு மேற்கோள்

ஒரு நோக்கத்துக்கெனப் பணிபுரியுங்கள், கைதட்டலுக்காகப் பணி செய்யாதீர்கள்.

பிறர் செல்வாக்கினைப் பெறுவதற்கன்றி, உங்கள் சுயவெளிப்படுத்தலுக்கென வாழுங்கள்,

உங்கள் இருப்பைப் பிறர் கவனிக்கவேண்டுமென முயலாதீர்கள், நீங்கள் இல்லாததை

மற்றவர்கள் உணருமாறு வாழுங்கள்.