பார்ப்பன சாம்ராஜ்யம்

பார்ப்பன சாம்ராஜ்யம்
முதலில், இந்தியாவில் பார்ப்பனர்கள் மக்கள் தொகையினைப் பார்ப்போம்.
(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்.
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பனர்கள்..
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பனர்கள்..
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.பேர்
(7) கோவா : 5 லட்சம்.
(8) கர்நாடகா : 45 லட்சம்.
(9) கேரளா : 12 லட்சம்.
(10) தமிழ் நாடு : 36 லட்சம்.
(11) ஆந்திரா : 24 லட்சம்.
(12) சத்தீஸ்கட் : 24 லட்சம்.
(13) ஒரிசா : 37 லட்சம்.
(14) ஜார்கண்ட் : 12 லட்சம்.
(15) பீஹார் : 90 லட்சம்.
(16) மேற்கு வங்கம் : 18 லட்சம்.
(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம்.
(18) உத்திரப் பிரதேசம் : 2 கோடி பார்ப்பனர்கள்.
(19) உத்தராகன்ட் : 20 லட்சம்.
(20) இமாசல பிரதேசம்: 45 லட்சம்.
(21) சிக்கிம் : 1 லட்சம்.
(22) அஸ்ஸாம் : 10 லட்சம்.
(23) மிசோரம் : 1.5 லட்சம்.
(24) அருணாச்சல் : 1 லட்சம்.
(25) நாகாலந்து : 2 லட்சம்.
(26) மணிப்பூர் : 7 லட்சம்.
(27) மேகாலயா : 9 லட்சம்.
(28) திரிபுரா : 2 லட்சம்.
பாரப்பனர்கள் அதிகம் உள்ள மாநிலம் := உத்திரப் பிரதேசம்.
பார்ப்பனர்கள் குறைவாக வாழும் மாநிலம் := சிக்கிம்.
பார்ப்பன..ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் := மேற்கு வங்கம்.
பார்ப்பனர்…அதிகமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மக்கள் தொகையில் 20% பார்ப்பனர்….
பொருளாதாரத்தில் பார்ப்பனர் பின்தங்கிய மாநிலம் := கேரளா
பொருளாதாரத்தில் பார்ப்பனர் வலிமையாக உள்ள மாநிலம் := அஸ்ஸாம்.
பார்ப்பனர் அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் := ராஜஸ்தான்.
பார்ப்பன MP க்களை அதிகம் கொண்ட மாநிலம் := உத்திரப் பிரதேசம்
லோக்சபாவில் பார்ப்பனர்கள் := 48%
ராஜ்யசபாவில் பார்ப்பனர்கள் := 36%
பார்ப்பன கவர்னர்கள் := 50%
பார்ப்பன கேபினெட் செயலர்கள் := 33%
மந்திரிகளின் செயலர்களில் பார்ப்பனர்கள் = 54%
இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பனர்கள் =.62%
பர்சனல் செகரட்டரிகளில் பார்ப்பன…70%
பல்கலைக்கழகங்களில் பார்ப்பனத் துணை வேந்தர்கள் := 51%
சுப்ரீம் கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 56%
ஹை கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 40%
வெளிநாட்டுத் தூதர்களில் பார்ப்பனர்தள் := 41%
பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பார்ப்பனர்,. மத்திய அரசில் := 57%, மாநில அரசுகளில் := 82%
வங்கிகளில் பார்ப்பனர்கள் := 57%
ஏர்லைன்சில் பார்ப்பனர்கள் := 61%
IAS இல் பார்ப்பனர்கள் := 72%
IPS இல் பார்ப்பனர்கள் := 61%
தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் := 83%
CBI மற்றும் Custom ஸில் பார்ப்பனர்கள் := 72%
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் எல்லாத் துறைகளிலும் அதிக இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்! இன்று இப்படி என்றால், ஆங்கிலேயர் காலத்தில்? சிந்தித்துப் பாருங்கள்.
யாவருடைய சிந்தனைக்கும். திருச்சி கணேசன்.


எளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி

சீனாவில் ஒரு வ்ங்கிக் கொள்ளை நடந்தது. கொள்ளையர்கள் துப்பாக்கியை வைத்து அனைவரையும் மிரட்டினர். “இந்தப் பணம் அரசுக்குச் சொந்தமானது. ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது” என்றார்கள். அனைவரும் அசையாமல் படுத்துவிட்டனர்.
(மனத்தை மாற்றும் முறை என்பது இதுதான். Mind changing concept, changing the conventional way of thinking)
அப்போது ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்பவேண்டி சற்று அநாகரிகமாக நடந்தாள். அப்போது கொள்ளையர்களில் ஒருவன் கூறினான். “இங்கு நடக்கப்போவது கொள்ளைதான். நாங்கள் கற்பழிப்பு செய்பவர்கள் அல்ல” என்று மிரட்டி அவளை உட்கார வைத்தான்.
(செய்யும் தொழிலில் கவனம் தேவை என்பது இதுதான். Being professional and focussed only on what you are trained)
கொள்ளையடித்துவிட்டுத் தங்கள் இடம் வந்தவுடன் ஒருவன், “சீக்கிரம் பணத்தை எண்ணிவிடலாம்” என்றான். “பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது, எண்ண நிறைய நேரம் ஆகும். நாளைச் செய்திகளில் அரசாங்கமே நாம் எவ்வளவு கொள்ளையடித்தோம் என்பதை வெளியிட்டுவிடும்” என்றான் தலைவன்.
(படிப்பைவிட அனுபவம் சிறந்தது என்று இதைத்தான் சொல்கிறோம். Always experience is more important than qualifications)
வங்கி மேலாளர் இதைக் காவல்துறையிடம் சொல்லமுனைந்தபோது அவனுடைய மேலாளர் தடுத்து, “வங்கியில் கொள்ளைபோனது இருபதுகோடிதான். நாம் முப்பதுகோடி பதுக்கி வைத்துக் கொண்டு, ஐம்பதுகோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவித்துவிடலாம். இதுதான் சந்தர்ப்பம்” என்றான்.
(காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது இதுதான். Swim along with the tide, Convert an unfavourable situation to your benefit)
இதைக் கேட்ட மற்றொரு அதிகாரி, “இம்மாதிரி வருஷம் ஒருதடவை கொள்ளை நடந்தால் நன்றாக இருக்கும்” என்றான்.
(This shows personal happiness is much more important than your job)
மறுநாள் பத்திரிகையில், வங்கியில் 100 கோடி ரூபாய் கொள்ளையிடப்பட்டதாக செய்தி வந்தது. கொள்ளையர்கள் அதிர்ந்து போனார்கள். பணத்தை எத்தனை முறை எண்ணி எண்ணிப் பார்த்தும் இருபது கோடிதான் இருந்தது. ஒருவன் எரிச்சல் அடைந்து,
“நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்த அரசு அதிகாரிகளும் வங்கி அதிகாரிகளும் தாங்கள் சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளையடித்து விட்டார்கள்” என்றான்.
தலைவன் சொன்னான்:”இப்போதுதான் படிப்பின் அவசியம் புரிகிறது.”
(Knowledge nowadays is very important than money).


இராமர் பாலம்

ஒருவன் (மெரீனா கடற்கரையில் என்று வைத்துக் கொள்ளுங்கள்) நடந்து கொண்டிருந்தான். காலில் ஒரு பாட்டில் தட்டுப்பட்டது. எடுத்துத் திறந்து பார்த்தான். (பட்டணத்தில் பூதம் போல, புகை, பிறகு) ஆனால் தோன்றியது, பூதம் அல்ல, அனுமான். “என்னை வெளியே விட்டாய். உனக்கு ஒரே ஒரு வரம்தான் தரமுடியும். என்ன வேண்டும் சொல்” என்றது அனுமான். “எனக்கு விமானத்தில் செல்லப் பிடிப்பதில்லை, கடல்குமட்டல்நோய் வேறு. நான் இலங்கைக்குப் போகவேண்டும். இராமஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்டிக்கொடு” என்றான் அவன். “ஏம்பா, எவ்வளவு கான்கிரீட், எவ்வளவு இரும்பு உருக்கு செலவு? எப்படி கர்டர்களை கடல் ஆழத்திற்கு இறக்கி நடுவது? எவ்வளவு தொலைவு? வேறு எதையாவது கேள்” என்றது அனுமான். “சரி, அப்படியானால் ஒன்று செய். எனக்கு மூன்று முறை திருமணம் ஆகி டைவர்ஸ் ஆகிவிட்டது. என் மனைவிகள் நான் அவர்களைப் புரிந்து கொள்ளமுடியவில்லை என்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், ஏன் அழுகிறார்கள், ஏன் சிரிக்கிறார்கள், ஒண்ணுமில்லை என்கிறபோது அவர்கள் மனசில் என்ன இருக்கிறது…இதெல்லாம் தெரிந்துகொள்ள வழிசெய்” என்றான் அவன். உடனே அனுமான் கேட்டது: “சரி சரி, இலங்கைக்குப் போகும் பாலத்தில் எத்தனை லேன் வேண்டும்? இரண்டா, நாலா? எவ்வளவு நேரத்தில் வேண்டும்?”
இப்படித்தான் இராமர் பாலம் முதன்முதலில் கட்டப்பட்டதாம்.


சாதியும் இனமும்

சாதி என்பது அகம். இனம் என்பது புறம். ஒருவனது இனம் என்பதில் அவனது மொழி, நாகரிகம், பண்பாடு ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன.
நாம் அயலாருடன் போராடும்போது இனத்தை முன்வைத்தே போராடுகிறோம். கர்நாடகத்திலிருந்து நீர் வேண்டும் என்று கேட்கும்போது தமிழன் என்ற அடையாளம் முன்நிற்கிறதே ஒழிய சாதி அல்ல. காவிரியில் நீர் வேண்டாம் என்று கூறும் பார்ப்பனரையோ தலித்தையோ காணமுடியாது.
நமக்குள் போரிடும் நிலை வரும்போதுதான் சாதி வருகிறது. இளவரசன் கொலை என்னும்போது சாதிரீதியாகத்தான் பேசவேண்டியிருக்கிறது.
தமிழினத்திற்குள் எத்தனையோ சாதிகள். ஆனால் ஒருவர்க்கொருவர் பேசித்தீர்க்க வேண்டுமே தவிர அடிதடி சண்டை கும்பல் வெட்டு கொலை என இறங்கினால், இழப்பு தமிழ் இனத்திற்குத்தான்.
சாதியற்ற நிலை, இலட்சியம். அது வருவதற்குச் சிலகாலமோ பலகாலமோ ஆகலாம். அதுவரை வேறு வழியில்லை. சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். பகுத்தறிவுரீதியான சிந்தனை ஒன்றுதான் சாதிக் கொடுமைகளை எதிர்க்கும் ஒரே வழி. பார்ப்பனியம் பகுத்தறிவுக்கு முரணானது என்பதால்தான் சாதியை எதிர்க்கும்போது பார்ப்பனியத்தையும் எதிர்க்க நேரிடுகிறது.
நீட்தேர்வுக்கு முதல் எதிரி மைய அரசு. அதனுடன் போரிடுகிறோம். தமிழன் என்ற அடையாளத்துடன், தமிழ்நாடு என்ற முத்திரையுடன்தான் இதற்குப் போராட வேண்டும். இங்கு சாதிவேறுபாட்டைப் பார்க்கலாகாது. (அதனால்தான் அனிதா (தற்)கொலைக்குச் சாதிவேறுபாடின்றி அநேகமாக அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.) நீட் தேர்வு வேண்டும் என்பவன் தமிழ் இனத்துக்கே எதிரியாகத்தான் இருக்கமுடியும்.