Product Description
கவிதை மிகப் பழமையானது, மொழியைப்போன்று உலகளாவியது. மிகப் பழங்கால மக்கள் கவிதையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நாகரிகம் வாய்ந்த மக்கள் அதைப் பண்படுத்தியிருக்கிறார்கள். எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும், எல்லாவித மக்களாலும், எல்லா இன மக்களாலும், போர்வீரர்களாலும், அரசியலறிஞர்களாலும், சட்டவல்லுநர்களாலும், மருத்துவர்களாலும், விவசாயிகள் போன்ற எளிய மக்களாலும், மதகுருமார்களாலும், அறிவியலறிஞர்களாலும், தத்துவவாதிகளாலும், அரசர்களாலும் கவிதை எழுதப்பட்டும் படிக்கப்பட்டும் கேட்கப்பட்டும் வந்திருக்கிறது. எல்லாக் காலங்களிலும், அது படித்தவர்கள், புத்திஜீவிகள், உணர்வுள்ளவர்கள் ஆகியோர் மிகுந்த அக்கறைகாட்டும் துறையாக இருந்துள்ளது. நாட்டுப்புறப்பாடல் போன்ற தனது எளிமையான வடிவங்களில் படிப்பறிவற்றோர், குழந்தைகள் முதலிய எவரையும் கவர்வதாகவும் இருந்திருக்கிறது.