அறிமுகம்

அறிஞர் திரு.க.பூரணச்சந்திரன் அவர்கள், திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டமும், தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். ஜெர்மன், வடமொழி, பிராகிருதம் ஆகியவற்றில் அடிப்படைத் தேர்ச்சி உண்டு. இவை யாவும் அவருடைய ஆய்வுகளுக்குப் பெரும் உதவியாக அமைந்தன. மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார்....
   மேலும் »

தினம் ஒரு செய்தி

ஜனநாயகத்தில் ஈடுபடுவதற்கு நிலவுடைமைச் சமூக மதிப்புகளிலிருந்து விடுபடும் மனப்பான்மை வேண்டும். பிரிட்டிஷ் கால சிற்றரசன் அல்லது ஜமீன்தார்போல லக்ஷ ரூபாய் கோட் அணிந்து...

மேலும் »

நூல்கள்

Owl Carousel - Images Demo

கட்டுரைகள்

சுதந்திர தினம்

சுதந்திர தினம் இன்று 71ஆம் சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது(?) மக்கள் மனத்தில் மகிழ்ச்சியில்லாதபோது சுதந்திர தினம் என்பது எங்கே இருக்கிறது? மையத்திலும் மாநிலத்திலும் அரசியல் தலைவர்களாக இருக்கின்ற முட்டாள்களுக்கு அல்லது வேஷக்காரர்களுக்கு இது புரியப்போவதில்லை. பணத்துக்காக அலைந்து பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து தமிழ்நாட்டையே விற்ற எல்லாக் கழிசடைகளும் இன்று அறிவுரை போதிக்கின்றன. என்ன செய்வது? இந்த நாட்டில் பிறந்து தொலைத்துவிட்டோமே என்ற வருத்தத்திற்குமேல் மனத்தில் வேறெதற்கும் இடமில்லை. நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்று தமிழ்நாட்டுப் பெண்மணி ஒருவர் போதித்தார்...

மேலும் »

நகைச்சுவை இலக்கியம்

நகைச்சுவை இலக்கியம் மனிதன் ஒருவன்தான் சிரிக்கத்தெரிந்த பிராணி என்று கூறப்படுகிறது. சிரித்தல் என்பது நகைச்சுவை உணர்வின் வெளிப்பாடு. உளவியலாளர்கள் பொதுவாக நகைச்சுவையைத் தூண்டுகின்ற காரணிகள், அச்சமயத்தில் ஏற்படும்...

மேலும் »

குழந்தைப் பாடல்கள்

குழந்தைப் பாடல்கள் (Nursery Rhymes) நர்சரி ரைம்கள் அல்லது குழந்தைப் பாடல்கள் என்பவை தமிழுக்குப் புதியவை அல்ல. பழங்காலத்திலும் தமிழில் குழந்தைப் பாடல்கள் இருந்தன. அவற்றை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று எழுதப்பட்ட பாக்கள்....

மேலும் »

இலக்கிய இயக்கங்கள்

இலக்கிய இயக்கங்கள் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் குறிப்பிட்ட அளவு இலக்கியம் ஒரு மொழியில் தோன்றுவதற்கு ஒரே மாதிரியான ஓர் இலக்கியப் போக்கு காரணமாக இருந்தால் அதனை ஓர் இலக்கிய இயக்கம் எனலாம். ஓர் இலக்கிய இயக்கம் ஆதிக்கம்...

மேலும் »

நவீனத்துவம்-சுருக்கம்

நவீனத்துவம் (மாடர்னிசம்) மேற்கத்திய உலகில் முதல் உலகப் போருக்கு முன் தொடங்கி வளர்ச்சி பெற்ற வணிகப்போட்டிகள், அவை நாடுகளுக்கிடையில் உருவாக்கிய முரண்பாடுகள், பொருள்மயமாக்கப்பட்ட வாழ்நிலை போன்றவை நவீனத் தன்மை என்று...

மேலும் »